இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது
பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரியின் மகளுக்கு 17 வயதாகிறது. அவர், செய்யாறு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். 22-ந்தேதி பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மாணவியின் தந்தை செய்யாறு போலீசில் புகார் செய்தார். புகாரில், 3 நாட்களாக அறிமுகமில்லாத வாலிபர் ஒருவர் செல்போனில் இன்ஸ்டாகிராம் மூலம் எனது மகளிடம் பேசி வந்தார், அந்த நபரிடம் இனிமேல் பழகக்கூடாது என அறிவுரை கூறியும் அவர் ேகட்கவில்லை. அந்த வாலிபர் எனது மகளை கடத்தி சென்றிருக்கலாம், எனத் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நேரு நகர் பகுதியை சேர்ந்த தீபக் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.