வீடு புகுந்து செல்போன்கள் திருட்டு
வீடு புகுந்து செல்போன்கள் திருட்டு நடந்துள்ளது.
மதுரை,
மதுரை பொன்மேனி மீனாட்சி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 37). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 செல்போன்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை திருடியவரை தேடி வருகிறார்கள்.