போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
சிதம்பரம்,
உலக போதை ஒழிப்பு தினத்தையொட்டி சிதம்பரத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கோட்டாட்சியர் ரவி பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் விழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கலால் தாசில்தார் ஹேமா ஆனந்தி, கலால் வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம், முதுநிலை வருவாய் ஆய்வாளர் தேவி, தாசில்தார் ஆனந்த், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன், ஆசிரியர்கள் ஜெயராமன், ரத்தின சபாபதி, காளிதாஸ், உடற்கல்வி ஆசிரியர் வாசுதேவன், நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.