விராலிமலை அருகே 61 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது

விராலிமலை அருகே 61 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

Update: 2022-03-26 18:18 GMT
விராலிமலை:
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் புகையிலை பொருட்களை விற்கப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விராலிமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
அப்போது தென்னம்பாடியை சேர்ந்த குழந்தைவேலு மகன் பரமசிவம் (வயது 35) என்பவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 61 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து விராலிமலை போலீசார் பரமசிவம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்