ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரனுக்கு நெஞ்சுவலி

ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரனுக்கு நெஞ்சுவலி

Update: 2022-03-26 18:14 GMT
திருவாரூர்;
திருவாரூரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்