உலக கணித தினம்

வசந்தகிருஷ்ணாபுரம் பள்ளியில் உலக கணித தினம் நடைபெற்றது.

Update: 2022-03-26 17:58 GMT
திருக்கோவிலூர், 

முகையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வசந்தகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக கணித தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு தலைமை ஆசிரியர் சாலா தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பட்டதாரி ஆசிரியரும், கணித மேதை ராமானுஜன் கணித மன்ற அமைப்பாளருமான அவதானி ஜானகிராமன் மாணவ-மாணவிகளுக்கு கணித விந்தை மற்றும் அறிஞர்கள் கண்காட்சியை நடத்தினார். எஸ்.வி.பாலு மாய சதுரம் மூலம் தீர்வு காண செய்தார். இதில் பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அதோமினிக்சாவியோ வரவேற்றார். முடிவில் பட்டதாரி ஆசிரியர் எஸ்.லாரன்ஸ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்