கோட்டப்பட்டி அருகே கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது
கோட்டப்பட்டி அருகே கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி போலீசார் பொய்யப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வேலவன் (வயது 27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வீட்டின் பின்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார், வேலவனை கைது செய்தனர்.