மாரண்டஅள்ளியில் பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்

மாரண்டஅள்ளியில் பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-03-26 17:53 GMT
பாலக்கோடு:
மாரண்டஅள்ளி பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களுடைய பட்டாவில் பெயர் திருத்தம், உறவு முறை திருத்தம், நிலபரப்பு திருத்தம் உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ள மாரண்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு பட்டா பதிவு திருத்த முகாம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். பாலக்கோடு தாசில்தார் பாலமுருகன், துணை தாசில்தார் சத்யபிரியா, வருவாய் ஆய்வாளர் செந்தில், வட்ட துணை ஆய்வாளர் பொன் அரிகசுதன், கிராம நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 25-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்