வேப்பனப்பள்ளி பகுதியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
வேப்பனப்பள்ளி பகுதியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள மாணவரப்பள்ளி, குருபரப்பள்ளி, பீமாண்டப்பள்ளி பகுதிகளில் 150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மாவட்ட குழந்தை வளர்ப்பு திட்ட அலுவலர் சாரதா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ருக்மணி மணிமேகலை, ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து நலுங்கு வைத்து ஆரத்தி எடுத்து மலர்தூவி ஆசிர்வாதம் செய்யப்பட்டது.
மேலும் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கி, 7 வகையான சாப்பாடு விருந்து பரிமாறப்பட்டது. மாவட்ட குழந்தை வளர்ப்பு திட்ட அலுவலர் சாரதா கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு காலத்தில் கடைபிடிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை கூறினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்திரா நாகராஜ், நஞ்சேகவுடு, கர்ப்பிணிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.