3வது மாடியில் இருந்து குதித்து தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தற்கொலை மத்திகிரி அருகே பரிதாபம்
மத்திகிரி அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
மத்திகிரி:
மத்திகிரி அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
பெண் ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி நவதி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் நந்தினி (வயது 24). தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கும், முனியப்பா என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது.
இதனிடையே முனியப்பாவுக்கும், நந்தினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த நந்தினி நேற்று முன்தினம் அதிகாலை நவதி அம்மன் நகர் பகுதியில் உள்ள வீட்டில் 3-வது தளத்தில் இருந்து தற்கொலை செய்வதற்காக கீழே குதித்தார்.
போலீசார் விசாரணை
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே நந்தினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.