பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கிட்டம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியை சேர்ந்த டர்லஷ் (வயது23), பெரியதாரம் பகுதியை சேர்ந்த விஜயன் (27), வடவளத்தை சேர்ந்த சதீஷ்குமார் (27), பர்கூர் தாலுகா செக்கில்நத்தம் விஜய் (19) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5,300 பறிமுதல் செய்யப்பட்டது.