கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்

700 பேருக்கு கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.

Update: 2022-03-26 17:52 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் பி.மேட்டுப்பட்டி நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு, 700 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் அமைச்சர் பேசுகையில், தமிழகத்தில் மொத்தம் 15½ லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதில் கடந்த 4 நாட்களில் மட்டும் 11 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது. அதன் மதிப்பு ரூ.3 ஆயிரத்து 950 கோடி ஆகும். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.208 கோடி மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி ரூ.1,250 கோடியை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு முதல்-அமைச்சர் விடுவித்து இருக்கிறார், என்றார்.
முன்னதாக திண்டுக்கல் நூற்றாண்டு மாநகராட்சி பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், வேலுச்சாமி எம்.பி., மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் சிவசுப்பிமணியன், கூட்டுறவு துணை பதிவாளர் முத்துகுமார், மேலாண்மை இயக்குனர் செபஸ்டியான், மத்திய கூட்டுறவு வங்கி முதல்நிலை வருவாய் அலுவலர் அன்புக்கரசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்