ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் பாலியல் பலாத்காரம் செய்து 2 வயது குழந்தை கொலை கூலித்தொழிலாளி கைது

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் பாலியல் பலாத்காரம் செய்து 2 வயது குழந்தையை கொலை செய்த கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-26 17:52 GMT
ஓசூர்:
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் பாலியல் பலாத்காரம் செய்து 2 வயது குழந்தையை கொலை செய்த கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குழந்தை பாலியல் பலாத்காரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பக்கமுள்ள நெரலூரை சேர்ந்தவர் தீபு (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 வயது பெண் குழந்தையை, தனது குழந்தைகளுடன் விளையாட நண்பரின் காரில், தீபு வீட்டுக்கு அழைத்து சென்றார். 
வழியில், நண்பரை வெளியே கடைக்கு அனுப்பிய தீபு, காரில் அந்த குழந்தையிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். இதில் அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தீபு, நண்பரின் கார் மீது, இருசக்கர வாகனம் மோதி, குழந்தை இறந்து விட்டதாக கூறி நாடகமாடி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். 
தொழிலாளி கைது
அப்போது தீபு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததால் தான் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீபுவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்