அழகியபாண்டியபுரத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பி ஓட்டம்

அழகியபாண்டியபுரத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-03-26 17:51 GMT
அழகியபாண்டிபுரம், 
தோவாளை வட்ட வழங்கல் அலுவலர் அரிவீர ராமபாண்டிதுரை தலைமையில் அலுவலர்கள் செந்தில்குமார், மந்திரமூர்த்தி ஆகியோர் பூதப்பாண்டி அருகே அழகியபாண்டியபுரம் பகுதியில் நேற்று மாலை 4 மணி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், அதிகாரிகளை கண்டதும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது, அதில் சிறு சிறு மூடைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காருடன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், ரேஷன் அரிசி மற்றும் காரை தோவாளை தாலுகா அலுவலகத்தில் ஒடைப்படைத்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்