நாகர்கோவிலில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
நாகர்கோவிலில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்,
நாகா்கோவில் கேசவதிருப்பாபுரம் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் ரவிகுமார்(வயது 42), பெயிண்டர். இவருக்கு சாந்தி (32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ரவிகுமார் மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை உறவினர்கள் கண்டித்தனர். இதனால், மனமுடைந்த ரவிகுமார் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.