பேச்சிப்பாறை அருகே ரப்பர் தடி ஏற்றிய லாரி சாலையோரம் கவிழ்ந்தது
பேச்சிப்பாறை அருகே ரப்பர் தடி ஏற்றிய லாரி சாலையோரம் கவிழ்ந்தது டிரைவர் படுகாயம
குலசேகரம்,
பேச்சிப்பாறை அருகே உள்ள கோதையாறு பகுதியில் அரசு ரப்பர் கழகத்தில் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது. குத்தகை எடுத்தவர்கள் மரங்களை வெட்டி தடிகளை லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். இங்கு பேச்சிப்பாறை-கோதையாறு சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கோதையாறு பகுதியில் இருந்து ரப்பர் மரத்தடிகள் மற்றும் விறகுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. அந்த லாரி கோதைமடங்கு என்ற இடத்தில் வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பேச்சிப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-----------