ஆற்காட்டில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு

ஆற்காட்டில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும்பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-03-26 17:30 GMT
ஆற்காடு

ஆற்காட்டில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும்பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை நகர மன்ற தலைவரிடம் கூறி உடனடியாக தீர்வு காணும் வகையில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந் நிலையில் நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தனது சொந்த நிதியில்் ஆற்காடு அண்ணாசாலை பஜார் பகுதியில் உள்ள கால்வாயில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார். அதன்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அப்போது ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நகராட்சி கமிஷனர் சதீஷ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
=========

மேலும் செய்திகள்