தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-03-26 17:28 GMT
பள்ளம் சீரமைக்கப்பட்டது
நாகர்கோவில் மீனாட்சிபுரம் தோப்பு வணிகர் தெருவில் சாலையின் நடுவே அமைக்கபட்டுள்ள கழிவுநீர் ஓடையின் மீது போடப்பட்டிருந்த மூடி சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் அமைத்து பள்ளத்தை மூடினர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 
சாலையை சீரமைக்க வேண்டும்
ஆற்றூர் கல்லுப்பாலத்தில் ஆற்றோரம் நீர் உறிஞ்சு கிணறு மூலம் காட்டாத்துறை, இரணியல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக கல்லுப்பாலம் சந்திப்பு முதல் ஆறு வரையுள்ள கான்கிரீட் சாலையை தோண்டி பெரிய குழாய்கள் பதித்து மூடப்பட்டது. ஆனால், சாலைய முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், ஜல்லிகள் பெயர்ந்து காணப்படும் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -எஸ்.கோவிந்தன் குட்டி, கல்லுப்பாலம்.
எரியாத விளக்குகள்
நாகர்கோவில் வைத்தியநாதபுத்தில் இருந்து வட்டவிளைக்கு செல்லும் சானல்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள தனியார் மில் அருகில் அமைக்கப்பட்டுள்ள 3 மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 -முருகேஷ், வைத்தியநாதபுரம்.
சாலை சீரமைக்கப்படுமா?
ஆடராவிளை சந்திப்பில் இருந்து சட்டுவன்தோப்பு வழியாக எள்ளுவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைப்பார்களா?.
 -எம்.சி.முத்துக்குமார், ஆடராவிளை. 
விபத்து அபாயம்
கிள்ளியூர் வட்டாரம் கொல்லஞ்சி ஊராட்சியில் அங்கன்வாடி  அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தின் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து பல இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி கட்டிடத்தை சிரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தர், கொல்லஞ்சி.

மேலும் செய்திகள்