கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டம்
கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ரோஜாபேகம் தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும் விறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து இருந்தனர்.
அப்போது பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை குறைக்கக்கோரியும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் முகமதுசித்திக், பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி, கவுன்சிலர்கள் கார்த்திக், பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.