தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபாரி கைது

தூத்துக்குடியில் தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-26 15:59 GMT
தூத்துக்குடி:
தருவைகுளம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 24.5.2017 அன்று கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தூத்துக்குடி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ராஜபாண்டி மகன் மகாராஜனை (வயது 37) போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 2018-ம் ஆண்டு முதல் விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் மகாராஜன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கடந்த 9.4.2021 அன்று விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றம் இவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த மகாராஜனை கடந்த ஒரு வருடமாக போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று விளாத்திகுளம் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் தருவைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் மகாராஜனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்