கார் மோதியதில் ராணுவ வீரர் பலி

தண்டராம்பட்டு அருகே கார் மோதியதில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.

Update: 2022-03-26 15:55 GMT
தண்டராம்பட்டு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சொக்கநாதன் கிராமம் வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 25). பஞ்சாபில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சினேகா (20). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. 

விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் சத்யராஜ் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் காட்டாம்பூண்டி கிராமத்தில் மாமனார் வீட்டில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றார். 

ராதாபுரம் கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திருவண்ணாமலை நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சத்யராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து சினேகா கொடுத்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் தினகரன் என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்