அரசு துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில் முதுகலை பட்டம் பெற்ற 2 முதியவர்கள்
அரசு துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில் 2 முதியவர்கள் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது.
விஜயாப்புரா: அரசு துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில் 2 முதியவர்கள் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது.
முதுகலை பட்டம்
விஜயாப்புரா நகரில் உள்ள பி.எல்.டி.இ., நிறுவனத்தின் ஜே.எஸ்.எஸ். கல்வி நிறுவனம் சார்பில் முதுகலை பட்டப்படிப்புக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் பணியில் இருந்த ஓய்வு பெற்றுள்ள 81 வயதான நிங்கய்யா பசய்யா எம்.ஏ. ஆங்கில தேர்வு எழுதினார். தற்போது அந்த தேர்வில் வெற்றிபெற்று முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
கர்நாடக மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அவர் ஏற்கனவே 4 முதுகலை பட்டங்களை பெற்றுள்ளார். தற்போது 5-வது முறையாக முதுகலை பட்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாராட்டு
அதேபோல் சிந்தகி ஆர்.டி.பாட்டீலா பட்டப்படிப்பு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பரசப்பா மடிவாளரா(வயது 66). இவரும் ஆங்கில பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கான தேர்வு எழுதி வெற்றிபெற்றுள்ளார். படிப்பதற்கு வயது தடையில்லை என்று கூறும் சொல்லை இவர்கள் இருவரும் உண்மையாக்கி பலருக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள். இவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.