கூட்டு கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய 4 பேர் கைது
கூட்டு கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் எடப்பாளையம் பைபாஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள செல்லியம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வடஅரசம்பட்டு பகுதியை சேர்ந்த அருணாசலம் (வயது 23), நாவக்கரையை சேர்ந்த குருநாதன் (27), சிவக்சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சந்துரு (23), தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த வினோத் (23) என்பதும், அவர்கள் கூட்டு கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.