பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய வியாபாரிகளிடம் அபராதம் வசூல்

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய வியாபாரிகளிடம் அபராதம் வசூல்

Update: 2022-03-26 14:09 GMT
கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அரவேனு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என்று தாசில்தார் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர் மோகன்குமார் மற்றும் கிராம உதவியாளர்கள் கொண்ட குழுவினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 அப்போது ஒருசில வியாபாரிகள் தங்களது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து அந்த வியாபாரிகளுக்கு, அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் கடைகளில் வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர். இதில் அரவேனு பகுதியில் வியாபாரிகளிடம் இருந்து ரூ.8,100 மற்றும் கோத்தகிரி பகுதியில் வியாபாரிகளிடம் இருந்து ரூ.1,950 என மொத்தம் ரூ.10 ஆயிரத்து 50 அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்