ஏரியில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
மாமண்டூர் ஏரியில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது.
தூசி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள மாமண்டூர் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஐயங்கார்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 38), பட்டு நெசவுத் தொழிலாளி, 24-ந்தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை, அவர் மாமண்டூர் ஏரியில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.