பிணமாக கிடந்த முதியவர் அடையாளம் தெரிந்தது

பிணமாக கிடந்த முதியவர் அடையாளம் தெரிந்தது

Update: 2022-03-26 00:14 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தருவை ஆலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பிணமாக கிடந்தவர், நெல்லை மேலப்பாளையம் ஆமின்புரம் பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (வயது 81) என்பதும், அவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்