நெல்லை: ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டம்
ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
நெல்லை:
தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று மாலையில் அழுது நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாநில அமைப்பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், பால்ராஜ், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை அமைப்பாளர் நடராஜன் வரவேற்று பேசினார். மாநில துணை அமைப்பாளர் சுப்புலட்சுமி போராட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.7,850 அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படியுடன் இணைத்து குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.300 வழங்க வேண்டும். பண்டிகை முன்பணம் ரூ.4,000 மற்றும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.