வரதட்சணை கொடுமையால் குழந்தையை கொன்று பெண் தற்கொலை

வரதட்சணை கொடுமையால் குழந்தையை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-03-25 22:42 GMT
சிக்பள்ளாப்பூர்: சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா ஹரலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சொண்ணேகவுடா. இவரது மனைவி நவலதா(வயது 26). இந்த தம்பதிக்கு 5 வயதில் அம்ஜன் குமார் என்ற மகன் இருந்தான். திருமணத்தின்போது நவலதாவின் பெற்றோர், சொண்ணேகவுடா கேட்ட வரதட்சணையை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு நவலதாவை, சொண்ணேகவுடாவும், அவரது குடும்பத்தினரும் தொல்லை கொடுத்து வந்தனர். 

இதனால் மனமுடைந்த நவலதா, நேற்று காலையில் தனது மகன் அம்ஜன் குமாருடன் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் அமைந்திருக்கும் பண்ணை குட்டைக்கு சென்று குழந்தையை குட்டையில் வீசி கொன்றார். பின்னர் தானும் குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த  சிட்லகட்டா போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினருடன் வந்து நவலதா மற்றும் அவரது குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் நவலதாவின் கணவர் சொண்ணேகவுடா, மாமனார் ராமண்ணா, மாமியார் பில்லம்மா, கொழுந்தன்கள் முரளி, சந்துரு, மைத்துனி காயத்திரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்