ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-25 22:06 GMT
ஈரோடு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன் பாட்ஷா (வயது 47). தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார்.
பின்னர் அலாவுதீன் பாட்ஷா திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவருடைய உடலில் கேனில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றினர்.
விசாரணை
பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர், ‘தன்னை போலீசார் வழக்கு தொடர்பாக மிரட்டுவதாகவும், விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி வந்த போலீசார் தன்னை தாக்கியதாகவும், இதனால் மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததாகவும்’ தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அலாவுதீன் பாட்ஷாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்