விஜயாப்புராவில் சிறுவன் தாக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது- மந்திரி அரக ஞானேந்திரா

விஜயாப்புராவில் சிறுவன் தாக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்

Update: 2022-03-25 21:32 GMT
பெங்களூரு: கர்நாடக மேல்-சபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் பிரகாஷ் ராதோட் கேட்ட கேள்விக்கு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பதிலளிக்கையில் கூறியதாவது:-
விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி தாலுகாவில் 7 வயது சிறுவன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிறுவனை தாக்கும் வீடியோ வைரலானதும் விஜயாப்புரா மாவட்ட போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். தவறு செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலவை இருக்கையில் அமர்ந்திருந்த தேஜஸ்வினிகவுடா, இது கொடூரமானது என்றும், இத்தகைய சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்