குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் வெளிநடப்பு
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எரிவாயு நுகர்வோர்கள், நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும், என்றனர். பின்னர் அவர்கள் கூட்டத்தில் மீண்டும் பங்கேற்காமல் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.