நிலப்பிரச்சினை விசாரணை முகாமில் 18 மனுக்களுக்கு தீர்வு
நிலப்பிரச்சினை விசாரணை முகாமில் 18 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி, போலீசாரும், வருவாய்த்துறையினரும் இணைந்து பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாமினை பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடத்தினர். மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, துணை தாசில்தார் சிலம்பரசன் ஆகியோர் தலைமையில் இந்த முகாம் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து நிலப்பிரச்சினை தொடர்பாக மொத்தம் 25 மனுக்கள் பெறப்பட்டு, 18 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.