ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை ஊராட்சிக்கு உட்பட்ட நீர்நிலை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. இதில் ஆண்டிமடம் விளந்தை பகுதியில் மேல அகத்தீஸ்வரர் கோவில் திருக்குளத்தின் கரையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பகுதிகளில் நீண்ட நாட்களாக இருந்த ஆக்கிரமிப்புகளை ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.