கடையம்: பனையை வெட்டியவர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

பனையை வெட்டியவர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்

Update: 2022-03-25 21:14 GMT
கடையம்:
கடையம் அருகே வெய்க்காலிப்பட்டியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பனைமரக்கட்டைகளை ஏற்றி வந்த மினி லாரியை வழிமறித்து, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.
இதில் அவர்கள், உரிய அனுமதியின்றி பனைமரங்களை வெட்டி, டிராக்டரில் ஏற்றி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு வனத்துறையினர் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

மேலும் செய்திகள்