தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட காலகம் முதல் நாடாக்காடு, பூக்கொல்லை சாலையில் இருபுறமும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் உள்ளது. தற்போது மழை பெய்ததால் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்கால்களை தூர்வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சண்முகவேலு, பேராவூரணி.