காமராசர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவி தொகை
கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
கரூர்,
கரூர் கோடங்கிப்பட்டியில் உள்ள சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளை சார்பில் 13-ம் ஆண்டு கல்வி உதவி தொகை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கரூர் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு 26 மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை வழங்கினார். 2009-ம் ஆண்டு முதல் இதுவரை 141 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.