ஏரி மண் கடத்திய 2 பேர் கைது. பொக்லைன் எந்திரம் பறிமுதல்
ஏரி மண் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பொக்லைன் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று உத்திரம்பட்டு, தச்சம்பட்டரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி மற்றும் ஒரு பொக்லைன் எந்திரத்தை போலீசார் மடக்கி விசாரணை செய்தனர்.
விசாரணையில் ஏரி மண் கடத்தி வந்தது தெரிந்தது. இதனையடுத்து லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பொக்லைன் டிரைவர் லோகநாதன் (வயது 32) மகேந்திரவாடி பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் (42) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.