மதுவுடன் அமிலம் குடித்து வாலிபர் தற்கொலை

திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விரக்தி அடைந்த வாலிபர் மதுவுடன் அமிலம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-25 18:46 GMT
காரைக்குடி,

திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விரக்தி அடைந்த வாலிபர் மதுவுடன் அமிலம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.';

பெண் கிடைக்காததால்...

காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதியை சேர்ந்தவர் பாண்டிமீனாள் (வயது 60). இவருடைய மகன் செல்லப்பாண்டி (29). நகை ெதாழிலாளி. இவருக்கு திருமணம் செய்வதற்காக அவரது தாயார் பல இடங்களில் பெண் பார்த்து வந்தார். பெண் சரியாக அமையாததால் செல்லப்பாண்டி விரக்தியில் இருந்து வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் செல்லபாண்டி தங்க நகைகளை பாலிஷ் செய்ய பயன்படுத்தும் அமிலத்தை மதுவுடன் கலந்து குடித்தார். பின்னர் வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது தாயாரும் அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 இது குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்