மாணவரை சக மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு
திண்டிவனம் அரசு கல்லூரியில் மாணவரை சக மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
திண்டிவனம் அரசு கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரை 10-க்கும் மேற்பட்ட சக மாணவர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை பார்த்து மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.