நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குடவாசல் தாலுகாவில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

Update: 2022-03-25 17:03 GMT
குடவாசல்;
குடவாசல் தாலுகாவில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 
ஆக்கிரமிப்புகள்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் உள்ள சேங்காலிபுரம், திருக்களம்பூர், ஆர்ப்பார் ஆகிய கிராமங்களில் உள்ள ஆறு, வாய்க்கால், குளங்கள் (நீர்நிலை புறம்போக்கு) ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகளால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே   இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 
அகற்றும் பணி
இதற்கு இணங்க கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் இப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற குடவாசல் தாசில்தார் உஷாராணி தலைமையில் மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் இப்பகுதியில் விவசாயத்துக்காக தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.  

மேலும் செய்திகள்