மான்கறி வைத்திருந்த 3 பேருக்கு அபராதம்

ஒகேனக்கல் அருகே மான்கறி வைத்திருந்த 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-03-25 16:41 GMT
பென்னாகரம்:-
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கர்நாடகா வனப்பகுதியில் இருந்து மான் கறி கடத்தப்படுவதாக ஒகேனக்கல் வனசரகர் சேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வனத்துறையினர் ரோந்து சென்ற போது நாடார் கொட்டாய் காவிரி ஆற்று பகுதியில் 6 பேர் மான் கறியை பங்கு போட்டு கொண்டிருந்தனர். வனத்துறையினர் வருவதை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர் அப்போது நாடார்கொட்டாய் சேர்ந்த சேர்ந்த அம்சரஜ் (வயது 26), அதே பகுதியை சேர்ந்த அய்யனாரப்பன் (29), தொப்பாறு பகதியை சேர்ந்த கண்ணன் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தப்பி ஓடிய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்