பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணி, வேளச்சேரி-பட்டாபிராம் இடையே இரவு 10.30 மணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 11.55 மணி, திருவள்ளூர்-ஆவடி இடையே இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (25-ந்தேதி) மற்றும் நாளை (26-ந்தேதி) முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது