ஆசனூர் வனப்பகுதியில் காட்டுத்தீ- அரிய வகை செடி- மரங்கள் எரிந்து நாசம்

ஆசனூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அரிய வகை செடி, மரங்கள் எரிந்து நாசம் ஆனது.

Update: 2022-03-24 21:26 GMT
தாளவாடி
ஆசனூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அரிய வகை செடி, மரங்கள் எரிந்து நாசம் ஆனது.
வறட்சி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் மழை பெய்யாததால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் கருகிவிட்டன. மரங்கள் காய்ந்து காணப்படுகின்றன. மேலும் நீர்நிலைகள் காய்ந்துவிட்டன. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் வெளியேறி அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன.
காட்டுத்தீ 
இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் அரேப்பாளையத்தில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. 
இந்த காட்டுத்தீயில் வனப்பகுதியில் உள்ள அரிய வகை செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசம் ஆனது. உடனே இதுகுறித்து மலைவாழ் மக்கள், ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்