வள்ளியூர்:
தெற்கு வள்ளியூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முப்பிடாதி (வயது 70). இவர் தனியார் தோட்டம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலையில் வள்ளியூருக்கு சென்றுவிட்டு தெற்கு வள்ளியூருக்கு சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கோட்டையடி அருகே வந்தபோது தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த முப்பிடாதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முப்பிடாதி இறந்தார்.
இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.