நாங்குநேரி: பெண்ணிடம் வழிப்பறி-வாலிபர் கைது

பெண்ணிடம் வழிப்பறி-வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-24 20:39 GMT
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு மனைவி பாப்பா (வயது 37). கூலித் தொழிலாளி. இவர் நாங்குநேரியில் உள்ள ஒரு வங்கிக்கு பஸ்சில் செல்வதற்காக தாழைகுளம் பஸ் நிறுத்தத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வழியில் தனது வீட்டில் உள்ள மாடுகளை அங்குள்ள காட்டில் மேய விடுவதற்காக கட்டிப்போட்டு விட்டு அங்கிருந்து அருகில் உள்ள குளக்கரை வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அரிவாளை காட்டி பாப்பாவுக்கு மிரட்டல் விடுத்ததுடன் தங்கச் செயின் என நினைத்து அவர் அணிந்திருந்த கவரிங் செயினையும், வங்கியில் செலுத்துவதற்காக வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் பறித்துச் சென்றனர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சாத்தான்குளத்தைச் சேர்ந்த பிச்சக்கண்ணு (21) என்பவரை கைது செய்தனர். மேலும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்