மகன்களுடன் தாய் மாயம்

மகன்களுடன் தாய் மாயமானார்.

Update: 2022-03-24 20:37 GMT
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் காலனி காமராஜ் நகர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 43). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், மீன்சுருட்டி அருகே உள்ள இடைக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த சிங்காரு மகள் மஞ்சுளா(29) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மஞ்சுளா வாரியங்காவல் கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்ததாகவும், இதையடுத்து அவரது நடத்தையை மணிகண்டன் கண்டித்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் மணிகண்டன் கோவைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக சென்றுள்ளார். கடந்த 21-ந் தேதி மணிகண்டன் ஊருக்கு வருவதாக மஞ்சுளாவிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மஞ்சுளா தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை, அவரது தாய் கண்டித்து மீண்டும் இலையூருக்கு அனுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில் ஊருக்கு திரும்பிய மணிகண்டன், வீட்டில் மஞ்சுளா மற்றும் மகன்கள் இல்லாததை அறிந்து, அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியுள்ளார். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து மஞ்சுளா மற்றும் அவரது மகன்களை யாரேனும் கடத்திச் சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்