சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தால் பொதுமக்கள் அவதி
சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
தாமரைக்குளம்:
அரியலூர் பகுதி மக்களுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நிரப்பப்பட்டு, குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலாக்குறிச்சி நுழைவுவாயில் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. குடிநீரானது சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அரியலூர் நகரில் சில பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்பதும், பொதுமக்களுக்கு போதுமான அளவில் குடிநீர் வழங்க என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.