மின் வினியோகத்திற்கு இடையூறாக இருந்த மரங்கள் அகற்றம்
மின் வினியோகத்திற்கு இடையூறாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டன.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூரில் இருந்து ஆதனங்குறிச்சி வரை உள்ள மின் பாதையில் மரங்கள் வளர்ந்து மின் வினியோகத்திற்கு தடையாக இருந்தது. இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மின்வாரிய ஊழியர்கள் மின்சார கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரங்களையும், கிளைகளையும் பொக்லைன் எந்திரம் மற்றும் மர அறுவை எந்திரம் மூலம் அகற்றினர்.