விவசாயி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து

தலைவாசல் அருகே விவசாயி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-24 20:24 GMT
தலைவாசல்:-
தலைவாசல் அருகே உள்ள பட்டுத்துறை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி (வயது 43). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துசாமிக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டாரை கழற்றுவதற்காக 3 பேர் வந்துள்ளனர். அப்போது முத்துசாமி தனது அக்காள் மகன் சின்ராசுவுடன் சேர்ந்து மோட்டாரை கழற்ற விடாமல் தடுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த 3 பேரும் சேர்ந்து முத்துசாமி, சின்ராசு ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
இது குறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதில் நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் மின்மோட்டாரை கழற்ற, சிறுவாச்சூர் அம்மன் நகரை சேர்ந்த மூர்த்தி (37). செல்வராசு (34), பட்டுதுறையை சேர்ந்த பிரபு (25) ஆகிய வந்து, அவர்களை தாக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்