ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
வாழப்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.
வாழப்பாடி:-
வாழப்பாடி அருகே உள்ள எம்.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 36). தனியார் நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அதிவிரைவு ரெயிலில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு நேரம் என்பதால் ராஜேந்திரன் இறந்து போனது யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலையில் ெரயில்வே தண்டவாளத்தில் ராஜேந்திரன் இறந்து கிடந்ததை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேந்திரன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சேலம் ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.